"நீங்களேல்லாம் ஹிட் எகிருவதற்காக எழுதறீங்க"
இது வலைப்பூக்களில் அதிகமாக உபயோகிப்படும் ஒரு வகையான சாடல் வார்த்தை...
எந்த ஒரு நல்ல விசயத்தைச் சொன்னாலும், அந்தப் பதிவர் மீது சேற்றை வாரி இறைப்பதில் பலருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி...ஹிட் எகிருவதால் என்ன லாபம்? எதுவும் கோடிக்கணக்கில் பணம் வரப் போகிறதா...இல்லை எழுதியவரை பாராட்டி எதுவும் விழா எடுக்கப் போகிறார்களா? என்றால் ஒரு வெங்காயமும் இல்லை...
கவர்ச்சிப்படங்கள் என்ற வார்த்தையைக் கண்டதும் எகிறிக் குதித்து வந்து அதைப் பார்க்கத்துடிக்கும் நம்மில் பலருக்கு நல்ல விடங்களைப் பகிர்ந்து கொள்ளும் பதிவரைப் பாராட்டி எந்த ஒரு வார்த்தையும் எழுதுவதில்லை...இது யார் தவறு... இது போன்ற விசயங்களைக் கேட்கும் என்னை பலப் புனைப்பேர்களில் வந்து காரி உமிழ்ந்து விட்டுப் போவீர்கள் என்பது வேறு விசயம்...
ஹிட் எகிர எதற்கு மாங்கு மாங்கென்று எழுத வேண்டும் நமிதாவின் பிட்டுப்படம் என்றால் மக்கள் பறந்து வர மாட்டார்களா..? அப்படி ஒரு மானங்கெட்ட தனத்திற்கு மஞ்சள் பத்திரிக்கை நடத்திவிட்டுப் போய் விடலாமே?
"வாசகனின் கையில் தான் எழுத்தாளனின் பேனா உள்ளது" ஒரு படைப்பாளனை நல் வழிப்படுத்துவதும் அவன் தான்....தீயதை எழுதத் தூண்டுவதும் அவன் தான்...
நல்ல எழுத்துக்களை ஆதரியுங்கள்...தீயவைகளைப் புறந்தள்ளுங்கள்.
Showing posts with label எழுத்தாளன். Show all posts
Showing posts with label எழுத்தாளன். Show all posts
[12:27 AM
|
7
comments
]

