Showing posts with label தமிழ்நாடு. Show all posts
Showing posts with label தமிழ்நாடு. Show all posts
| 7 comments ]

பெரும் புயலடித்து ஓய்ந்து இருக்கிறது...இந்திய தேர்தல்.எவ்வளவோகுழப்பத்திற்கு மத்தியில்மக்கள்தெளிவாகவே இருக்கிறார்கள் என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

பொதுவாக தமிழக மக்கள் எதையும் மொத்தமாகவே செய்வார்கள்.அலைகளில் சிக்கியே எல்லாத்தேர்தல்களும் சீரழிந்து போனது என்பதே தமிழகாரசியலின் முந்தைய வரலாறு...முதல் முறையாக மக்கள் தெளிவாக செயல்பட்டு எதிர்கால அரசியல் கோமாளிகளுக்கு மக்கள் எச்சரிக்கை மணியடித்திருக்கிறார்கள்...

அதில் இந்த பகுதியில் காங்கிரஸ், மற்றும் பாமக பெற்ற சாட்டையடிகளைப்பார்ப்போம்.

சாட்டையடி-1-காங்கிரஸ்
மத்தியில் காங்கிரஸ் ஒரு கணிசமான சீட்டுக்களைப் பெற்றாலும் தமிழகத்தில் காங்கிரசுக்கு சிறு சறுக்கல் தான்.ஈழப்பிரச்சனையில் இவர்களின் கண்டு கொள்ளா நிலையும், தலிவர்களின் வாய்ச்சவடலும் இதன் தலிவர்கள் தலை உருள காரணமாக அமைந்தது.இனிவரும் ஆட்சியில் இதனைச் சரிசெய்ய மக்கள் அளித்த சந்தர்ப்பம் தான் ஏனைய சீட்டுக்களும்..

சென்ற முறை லட்சங்களின் முன்னனியில் வெற்றி பெற்ற சிதம்பரத்திற்கு இந்த தேர்தல் முடிவில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது...மிகச்சொற்ப்ப எண்ணிக்கையில் இழுப்பறி, தொகுதிபக்கம் வராத MPக்களுக்கு அவன் எந்த கொம்பனானாலும் இது தான் நிலை என்று மக்கள் பெரும் சாட்டையடி மூலம் உணர்த்தியுள்ளனர்...




சாட்டையடி-2-பாமக

ஐந்து வருடங்கள் கோபாலபுரத்தில் வேட்டிதுவைப்பார், அடுத்த ஐந்து வருடங்கள் போயஸ் கார்டனில் சேலைதுவைப்பார் என்று புகழப்படும்...ராமதாஸின் சந்தர்ப்பவாத அரசியலுக்கு இந்த தேர்தலில் பலத்த சாட்டையடி...எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்தக்கட்சியில் அமைச்சர்களாக இருக்க வேண்டுமென்பதை அரசியல் கொள்கையாகக் கொண்ட பாமக பெற்ற சாட்டையடியை தமிழகமே கொண்டாடியது...ஆளுங்கட்சி எதிர்க்கட்சி பாகுபாடில்லாமல் அனைவரும் வரவேற்ற ஒரு நிகழ்வு இந்தப்படுதோழ்வி...

எங்கள் கட்சி MLA, MPக்கள் தவறு செய்தால் சாலை நடுவில் வைத்து சவுக்கால் அடிப்போம் என்று ஆரம்ப காலங்களில் இவர்கள் கூறி வந்ததற்கு இன்று இவர்கள் அனைவரையும் மக்கள் படுதோல்வி எனும் சவுக்கால் விளாசியிருக்கிறார்கள்...

தோல்வியிலிருந்து தான் உண்மையான பாடங்களைக்கற்றுக்கொள்ள இயலும்..அதை அறியாமல், தங்களின் சந்தர்ப்பவாத அரசியலுக்கான தோல்வியை , தேர்தல்கமிசன் மீதும், வாக்கு இயந்திரம் மீதும் கூறிக்கொள்வதை விட்டு விட்டு அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபடவிட்டால் பாமக என்ற கட்சியை இனி வரலாறுகளில் மட்டுமே தேட முடியும்...

| 48 comments ]

அன்பு சகோதரர்களே...

இதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்ளப்போகிறீர்கள் என்று என்க்குத்தெரியவில்லை...இதை படித்து விட்டு நீங்கள் என்னை ராஜபக்சே கூட்டத்தை சேர்ந்தவன், என்னலாம்...கெட்ட வார்த்தையால் என்னை வையலாம்.

ஆனால் தமிழ் பதிவர் உலகம் சார்பாக நான் சொல்ல வேண்டிய விடயத்தைக் கூறியே ஆக வேண்டும். சமீப காலமாக ஈழத்தமிழர்களை, தலைவர் பிரபாகரனைப்பற்றி எழுதினாலே...நீங்கள் வேலை இல்லாதவர்கள், எங்கள் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளாதவர்கள்...நாயே பேயே என்று திட்டித்தீர்க்கிறீகள்.

யார் மீது உங்களுக்கு கோபம், யார் உங்கள் எதிரி..யார் உங்கள துரோகி...
உங்களுக்காக ஈழத்தமிழன், ஈழத்தமிழன் என்று அரசியல் பண்ணிக்கொண்டு தத்துப்பிள்ளைக்கு பாசத்தை தாரை வார்த்து, சொந்த பிள்ளையான தமிழகத்தமிழனை மறந்த தலைவர்கள் தமிழகத்தில் ஏராளம்...

கலைஞரைத் துரோகி என்கிறீகள்...அவர் தோற்ற வரலாறெல்லாம் உங்களுக்குத் தோள் கொடுத்த நேரத்தில் தானே...தோழ்வியில் துவண்டு
இருந்த அந்த நேரத்தில் அவருக்கு இலங்கைத்தமிழர் நீங்கள் என்ன செய்தீர்...

வைகோ, திருமா,பழ,ராமதாஸ் இப்படி உங்கள் பின் நின்றவர்கள் ஏராளம்...அவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்கிறீகள்...துப்பாக்கியுடன் இலங்கைக்கு வந்து போராட வில்லையா... அட அவர்களை விடுங்கள் இவ்வளவு பேசும் நீங்கள் ஏன் போரட்ட களத்தை விட்டு விட்டு புழம் பெயர்ந்து இங்கு வந்து எங்களுடன் போராடிக்கொண்டிருக்கிறீர்கள்...

சமீபத்தில் பதிவுகளில் வார்த்தை துஷ்பிரயோகம் வேறு...சோனியா ஒரு காமவெறி பிடிதவள் என்று அண்மையில் ஒரு பதிவு...தன் கணவரை கொன்று விட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஒட்டு மொத்த தமிழினத்தையே கொன்று குவித்து அந்த ரத்தத்தில் தினமும் குளித்து தனது பலியை தீர்த்துக்கொள்கிறார் ஒரு ரத்த வெறி பிடித்த இத்தாலிக்காரி.என்ற விளக்கம் வேறு தன் கணவனைக்கொன்ற ஒரே காரணத்திற்காக மதுரையை எரித்த கண்ணகி கற்புக்கரசியானால்... இதுவும் ஒரு கற்புக்கரசியின் செயல் தான்...
இது போன்ற தரங்கெட்ட வார்த்தைகளை தவிருங்கள்...கோபம் கண்னை மறைக்கும் என்றால் அதே கோபம் சோனியா அவர்களுக்கும் இருக்கும் தானே..காட்டுக்குள் இருக்கும் பிரபாகரனும் குடும்பத்துடன் தானே இருந்தார்..? நீங்கள் உபயோகித்த அந்த வார்த்தையை அவர்மீது பிரோயோகித்தால் உங்களால் தாங்க இயலுமா..சோனியாவும் ஒரு பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்க்ப்பட்ட தலைவர் தான்...உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த பழகிக்கொள்ளுங்கள்...

உங்கள் கோபத்தை எதிரிகளிடம் காட்டுங்கள்...நண்பர்களிடம் காட்டி நண்பர்களையும் எதிரியாக்கி விடாதீர்கள்...

இந்த நிலைக்கு யார் காரணம் யோசியுங்கள்...

புகழின் உச்சியில் இருக்கும் போது சறுக்கி விடாமல் இருப்பது தான் முக்கியம்...அந்த நேரத்தில் சுற்றங்களைப்பகைத்துக்கொண்ட யாரும் வெற்றி கொண்டதில்லை அதற்கு பேருதாரணம் சாதாம் ஹுசைன் மற்றும் விடுதலைப்புலிகள்...

வட, கிழக்குப்பிரச்சனையில் கருணாவை எதிரியாக்கியது...கூட இருந்த முஸ்லிம் சகோதரர்களை பகைத்துக்கொண்டது...இலங்கைத் தமிழர்களுக்காகவே வாழ்நாள் எல்லாம் உழைத்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் உள்ளிட்டவர்கள் கொன்றது...ஒரு நாட்டின் தலைவரான ராஜூவைக் கொன்றது...

இவையெல்லாம் தானே உங்கள் பின்னடைவிற்கு காரணம்....ஒருவர் மீது ஒருவர் பழி போடுவதை விடுங்கள்...உங்கள் சோகம் நாங்கள் அறிகிறோம்...
நாங்கள் ஜடமல்ல...


ஆயுதப்போரை கைவிடுங்கள்...காந்திஜி வழியில் இன்னுமோர் போராட்டத்தை ஆரம்பியுங்கள்...அகிம்சை நிச்சயம் வெல்லும்...