| 7 comments ]

எண்பத்தாறு வயதாகி விட்டது...இனி உள்ள காலம் எப்படி இருக்குமென்று தெரியவில்லை.ஆடி முடித்தாகி விட்டது...இனி குடும்பத்திற்கு உயில் எழுதிவைக்க வேண்டிய வேளை இது.யாருக்கு என்ன எழுத..?கோபாலபுர வீடு சின்னவனுக்கும், திருக்குவளை சொத்து பெரியவனுக்கும்,பொண்ணுங்களுக்கு சென்னையில் உள்ள சில பங்களாக்கள்...இப்படி எழுதிவைத்தால் அது சாதாரண குடிமகன்...




உடன் பிறப்போ, 70 வருடங்களாக அரசியலில் திளைத்தவர்...வாய்ச்சொல்லில் வீரரவர், பாளையங்கோட்டை சிறையில் பாம்புகள், பல்லிகள் நடுவில் அஞ்சாமல் இருந்த கலைஞர் என்று தவறாக எங்களுக்கு அடையாளங்காட்டப்பட்ட முதல்வர் கருணாநிதி சொத்து பிரித்த அதிசயத்தைப்பார்த்து தமிழகமே டரியலாகிக் கிடக்கிறது.

சின்னவனுக்கு தமிழ்நாடு, பெரியவனுக்கு வடநாடு, பொண்ணுக்கு டில்லி அடேயப்பா...என்னா வில்லத்தனம்.

"அப்பா அப்பா எனக்கு மத்திய மந்திரி பதவிதான் வேணும்" என்று மூத்தவன் கேட்ட போது பேராசிரியர், "தம்பி காமடி பண்ணாதீங்க நீங்க தான் அரசியல் பக்கமே வராமே ரவுடி தொழிலில் கொடிகட்டி பறக்குறீங்க பின்னஎப்படி சாத்தியம்" என்றதை தவிடு பொடியாக்கி, ஒரே தேர்தலில் மதுரையை மூத்தவனுக்கு சொந்தமாக்கி மத்தியில் போய் கிடையாக கிடந்து சாதித்து திரும்பிய தலைவரே...சான்சே இல்லே தலிவா..

ஊருக்கு வந்ததும் சின்னவன் தொல்லை, "அப்பா நேத்து வந்த அண்ணாத்தேக்கு இம்மாம் பெரிய போஸ்ட்....என் இத்தனை நாள் அரசியல் வாழ்க்கையே வேஸ்ட்... என்ற போது நடுநிலை தவறாத தலிவர் உடனே சின்னவனுக்கு எடுத்துக்க ராசா துணை முதல்வர் பதவியை என்று தமிழ் நாட்டை தாரை வார்த்து கொடுத்து குடும்பத்தில் யார் மனசும் கோணாமல் நடந்த தானைத்தலிவரே...

காலமெல்லாம் நீர் ஆட்சிக்கு வரனுமென்று கடுமையா உழச்ச இந்த தொண்டனுக்கு என்னய்ய பண்ணுனீர்....பேராசிரியர் என்ற அந்த அரசியல் அரிச்சந்திரனுக்கு எப்போதும் இரண்டாவது இடம் தானா?

அதெல்லாம் விடு தல்ல்ல்வா நாளைக்கு உனக்கு பிறந்த நாளாமே... வாழ்த்துக்கள் தலிவா....தலைவர் வாழ்க ...தங்கத்தலிவர் வாழ்க...

7 comments

தமிழ்க்கீரன் said... @ June 4, 2009 at 7:05 AM

MiC TESTING

Athisha said... @ June 4, 2009 at 9:21 AM

வருக வருக ..

வாழ்க தலிவர் வாழ்க அவர் குடும்பம் ;-)

சஞ்சயன் said... @ June 4, 2009 at 9:43 AM

தலிவனுக்கு நான் எழுதிய கடிதம் படிக்க கீழே சொடக்குங்கள்
http://visaran.blogspot.com

Anonymous said... @ June 4, 2009 at 10:23 AM

சிங்களவன் கிட்ட காட்ட முடியாத வீரத்த இங்க வந்து காட்டாதே நாயே

தமிழ்க்கீரன் said... @ June 4, 2009 at 12:46 PM

அதிஷா said...
வருக வருக ..

வாழ்க தலிவர் வாழ்க அவர் குடும்பம் ;-)

வரவேற்பிற்கு நன்றி நண்பரே

தமிழ்க்கீரன் said... @ June 4, 2009 at 12:48 PM

//சிங்களவன் கிட்ட காட்ட முடியாத வீரத்த இங்க வந்து காட்டாதே நாயே//

நான் தமிழ்நாட்டுத் தமிழண்டா பண்ணாடை தெரு நாயே...

மயாதி said... @ June 4, 2009 at 6:27 PM

அனுப்பு தலிவா அனுப்பு , சொனியாட்ட சொல்லி இன்னும் கொஞ்சம் குண்டு இலங்கைக்கு அனுப்பு...
இன்னும் கொஞ்சம் தமிழன் மிச்சம் இருக்கானாம்...

Post a Comment