| 48 comments ]

அன்பு சகோதரர்களே...

இதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்ளப்போகிறீர்கள் என்று என்க்குத்தெரியவில்லை...இதை படித்து விட்டு நீங்கள் என்னை ராஜபக்சே கூட்டத்தை சேர்ந்தவன், என்னலாம்...கெட்ட வார்த்தையால் என்னை வையலாம்.

ஆனால் தமிழ் பதிவர் உலகம் சார்பாக நான் சொல்ல வேண்டிய விடயத்தைக் கூறியே ஆக வேண்டும். சமீப காலமாக ஈழத்தமிழர்களை, தலைவர் பிரபாகரனைப்பற்றி எழுதினாலே...நீங்கள் வேலை இல்லாதவர்கள், எங்கள் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளாதவர்கள்...நாயே பேயே என்று திட்டித்தீர்க்கிறீகள்.

யார் மீது உங்களுக்கு கோபம், யார் உங்கள் எதிரி..யார் உங்கள துரோகி...
உங்களுக்காக ஈழத்தமிழன், ஈழத்தமிழன் என்று அரசியல் பண்ணிக்கொண்டு தத்துப்பிள்ளைக்கு பாசத்தை தாரை வார்த்து, சொந்த பிள்ளையான தமிழகத்தமிழனை மறந்த தலைவர்கள் தமிழகத்தில் ஏராளம்...

கலைஞரைத் துரோகி என்கிறீகள்...அவர் தோற்ற வரலாறெல்லாம் உங்களுக்குத் தோள் கொடுத்த நேரத்தில் தானே...தோழ்வியில் துவண்டு
இருந்த அந்த நேரத்தில் அவருக்கு இலங்கைத்தமிழர் நீங்கள் என்ன செய்தீர்...

வைகோ, திருமா,பழ,ராமதாஸ் இப்படி உங்கள் பின் நின்றவர்கள் ஏராளம்...அவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்கிறீகள்...துப்பாக்கியுடன் இலங்கைக்கு வந்து போராட வில்லையா... அட அவர்களை விடுங்கள் இவ்வளவு பேசும் நீங்கள் ஏன் போரட்ட களத்தை விட்டு விட்டு புழம் பெயர்ந்து இங்கு வந்து எங்களுடன் போராடிக்கொண்டிருக்கிறீர்கள்...

சமீபத்தில் பதிவுகளில் வார்த்தை துஷ்பிரயோகம் வேறு...சோனியா ஒரு காமவெறி பிடிதவள் என்று அண்மையில் ஒரு பதிவு...தன் கணவரை கொன்று விட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஒட்டு மொத்த தமிழினத்தையே கொன்று குவித்து அந்த ரத்தத்தில் தினமும் குளித்து தனது பலியை தீர்த்துக்கொள்கிறார் ஒரு ரத்த வெறி பிடித்த இத்தாலிக்காரி.என்ற விளக்கம் வேறு தன் கணவனைக்கொன்ற ஒரே காரணத்திற்காக மதுரையை எரித்த கண்ணகி கற்புக்கரசியானால்... இதுவும் ஒரு கற்புக்கரசியின் செயல் தான்...
இது போன்ற தரங்கெட்ட வார்த்தைகளை தவிருங்கள்...கோபம் கண்னை மறைக்கும் என்றால் அதே கோபம் சோனியா அவர்களுக்கும் இருக்கும் தானே..காட்டுக்குள் இருக்கும் பிரபாகரனும் குடும்பத்துடன் தானே இருந்தார்..? நீங்கள் உபயோகித்த அந்த வார்த்தையை அவர்மீது பிரோயோகித்தால் உங்களால் தாங்க இயலுமா..சோனியாவும் ஒரு பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்க்ப்பட்ட தலைவர் தான்...உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த பழகிக்கொள்ளுங்கள்...

உங்கள் கோபத்தை எதிரிகளிடம் காட்டுங்கள்...நண்பர்களிடம் காட்டி நண்பர்களையும் எதிரியாக்கி விடாதீர்கள்...

இந்த நிலைக்கு யார் காரணம் யோசியுங்கள்...

புகழின் உச்சியில் இருக்கும் போது சறுக்கி விடாமல் இருப்பது தான் முக்கியம்...அந்த நேரத்தில் சுற்றங்களைப்பகைத்துக்கொண்ட யாரும் வெற்றி கொண்டதில்லை அதற்கு பேருதாரணம் சாதாம் ஹுசைன் மற்றும் விடுதலைப்புலிகள்...

வட, கிழக்குப்பிரச்சனையில் கருணாவை எதிரியாக்கியது...கூட இருந்த முஸ்லிம் சகோதரர்களை பகைத்துக்கொண்டது...இலங்கைத் தமிழர்களுக்காகவே வாழ்நாள் எல்லாம் உழைத்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் உள்ளிட்டவர்கள் கொன்றது...ஒரு நாட்டின் தலைவரான ராஜூவைக் கொன்றது...

இவையெல்லாம் தானே உங்கள் பின்னடைவிற்கு காரணம்....ஒருவர் மீது ஒருவர் பழி போடுவதை விடுங்கள்...உங்கள் சோகம் நாங்கள் அறிகிறோம்...
நாங்கள் ஜடமல்ல...


ஆயுதப்போரை கைவிடுங்கள்...காந்திஜி வழியில் இன்னுமோர் போராட்டத்தை ஆரம்பியுங்கள்...அகிம்சை நிச்சயம் வெல்லும்...

48 comments

Robin said... @ June 5, 2009 at 12:22 AM

கருத்துக்கள் அனைத்தும் உண்மை. ஆனால் புரிந்து கொள்ள கொஞ்சம் நிதானம் வேண்டும்.

பிருந்தன் said... @ June 5, 2009 at 12:51 AM

தமிழகத்தமிழர்களோ,பதிவர்களோ எதிரிகள் அல்ல இந்திய அதிகாரவர்கம் மட்டுமே எதிரி, வாழ்நாள் முழுதும்,எனது பரம்பரைக்கும்.......

Unknown said... @ June 5, 2009 at 12:54 AM

Good post.
I always wanted to write like this, but if I write like this they will call me 'betrayer'.
We didn't think about the realistic of this problem.
So sad that so many brothers and sisters died in this.

தமிழ்க்கீரன் said... @ June 5, 2009 at 1:34 AM

//Robin said...
கருத்துக்கள் அனைத்தும் உண்மை. ஆனால் புரிந்து கொள்ள கொஞ்சம் நிதானம் வேண்டும்.//

வெற்றிக்கு நிதானம் மிக முக்கியம்

Anonymous said... @ June 5, 2009 at 1:44 AM

நான் படித்த மிக சிறந்த பதிவுகளில் ஒன்று. பொறுப்பான பதிவு. நன்றி. வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத்தமிழர்களில் பலர் புலிகளினால் நன்றாக Brainwash செய்யப்பட்டவர்கள். அவர்கள் கேட்பது புலிகளின் பிரசார வானெலி பார்ப்பது GTV, தீபம் இணையத்தில் புதினம், தமிழ்வின்,Tamilnet இப்படியாக அவர்கள் வேறு ஒரு கனவு உலகத்திலேயே வாழ்கிறார்கள். இலங்கையில் புலிகள் தங்களை எதிர்த்தவர்களை எல்லாம் படுகொலை செய்த மாதிரி இவர்களுக்கும் புலிகளை எதிர்ப்பவர்கள் தமிழ் துரோகிகள் ஆனார்கள் .ஆனால் தமிழ் நாட்டு பதிவர்களில் பெரும்பாலேர் இவர்களுக்கு நல்லதை, யதார்த்தை கூறாமல் மேலும் உசுப்பேற்றி கொண்டேயிருந்தார்கள் என்பது கவலைக்குரியது.

Anonymous said... @ June 5, 2009 at 1:52 AM

What you said is the correct one. our eela tamil brothers have to realize this issue. Always they are thinking about ltte only.

பனையூரான் said... @ June 5, 2009 at 2:11 AM

நூறு வீதம் எவரும் சரியாக இருந்து விடமுடியாது. புலிகளின் வீழ்ச்சிக்கு சர்வதேசம் அவர்களின் வளர்ச்சியைக்கண்டு பயந்ததே காரணம். ஆயுதப் போராட்டம் ஏன் உருவானது என்றும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.இக்காலத்தில் கூட ஜனநாயக ரீதியாகக் குரல் கொடுப்போர் என்ன ஆகிறார்கள் என்பது யாவரும் அறிந்தது.கொல்லப்பட்டவர்கள் ஊடகவியலாலர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அடுக்கிக்கொண்டு போகலாம். பதிவர்கள் மீதுள்ள கோபத்தால் போரட்டத்தை கொச்சைப் படுத்த வேன்ன்டாம்.

தமிழ்க்கீரன் said... @ June 5, 2009 at 2:38 AM

//பிருந்தன் said...
தமிழகத்தமிழர்களோ,பதிவர்களோ எதிரிகள் அல்ல இந்திய அதிகாரவர்கம் மட்டுமே எதிரி, வாழ்நாள் முழுதும்,எனது பரம்பரைக்கும்.......//

இந்த கொலைவெறியை விடுங்கள்,இந்த வெறி எந்த ஒரு பிரச்சனைக்கும் முடிவாக அமையாது

King... said... @ June 5, 2009 at 3:15 AM

இதோ பார்றா இன்னொருத்தரு...திருந்துங்கப்பா..

King... said... @ June 5, 2009 at 3:17 AM

பிரபாகரன் இல்லைன்னு ஒரு விசயம் வந்ததும் எவ்வளவு கதைகள் தமிழர்களை திருத்த முடியாது...

Anonymous said... @ June 5, 2009 at 3:50 AM

சொம்பு தூக்கிகளை விடுங்கள். நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? ஒரே பதிவு பல பகுதிகளில். சகோதரனின் உயிரிலும் 500 ரூபாய் பெரிதாப் போனவனை எவன் மதிப்பான்? எனக்கு ஒரு சந்தேகம் தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கு கோபம் பொட்டுக் கொண்டு வரும். ஆனா எதுக்கென்று தெரியாது? எத்தனை தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கு இலங்கை என்றொரு நாடு உண்டு. அங்கு தமிழர்கள் வாழ்கிறார்கள். ஈழத்தமிழர்கள் என்று பெயர் என்பது தெரியும்.
சிங்களத் தமிழர்கள் என்று நினைப்பவர்களை(தமிழர்களை)கட்டி வைத்து அடிக்கத் தயாரா?
நீங்கள் பதிவுலகை மட்டுமே கணக்கில் எடுக்கக் கூடாது. ஒட்டு மொத்த தமிழ் நாட்டையும் பார்க்க வேண்டும். செத்துத் தொலைந்த சனத்தை விடுங்கள் இன்னமும் அகதியாய்( இந்தியாவில்) இருப்பவர்களுக்கு என்ன பதில் கொடுக்கப் போகிறீர்கள்? மிஞ்சிப் போனால் அதுக்கு ஏதாவது பண்ணுங்கள். பெயரில் தமிழன் என்று இருப்பவனை தமிழனுக்கு பிடிக்காமல் போகும் தானே? இது வரைக்கும் எதுவுமே செய்யாத தமிழகம் இனி என்ன செய்து விடும்?? ஆக மொத்தம் நட்டம் யாருக்குமே இல்லை. அதாவது ஏதாவது செய்யும் என்று எண்ணிய காலங்களில் ஒன்றுமே பண்ணாதது இனி பண்ணி என்ன பண்ணாட்டி என்ன? மாறி மாறித் திட்டுங்கள். கடியுங்கள். முடிந்தால் போட்டுத் தள்ளுங்கள்.

வெற்றி-[க்]-கதிரவன் said... @ June 5, 2009 at 5:01 AM

யார் மீதும் தகாத வார்த்தைகள் பயன் படுத்துறது தவறு... அகிம்சை வழில போராடனும்... போன்று எழுதிருப்பதை ஒத்துக்கொள்ள முடிகிறது....

//தன் கணவனைக்கொன்ற ஒரே காரணத்திற்காக மதுரையை எரித்த கண்ணகி கற்புக்கரசியானால்... இதுவும் ஒரு கற்புக்கரசியின் செயல் தான்...//

கதைக்கும் நிசத்துக்கும் வித்தியாசம் இல்ல. ? கதையா இருந்தாலும் கண்ணகி பண்ணினது தப்புதான்

அயிரகனக்குல மக்களை கொலபன்னினதுக்கு கதையா துணைக்கு இலுக்குரிங்களா ?

//சோனியாவும் ஒரு பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்க்ப்பட்ட தலைவர் தான்...உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த பழகிக்கொள்ளுங்கள்...//

உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் அந்த அம்மா கட்டு படித்திருந்தா இந்தனாயிரம் மக்கள் மடிந்திருக்க மாட்டர்கள்... லட்சகனக்குல மக்கள் இப்ப அகதி முகாம்ல தங்கி அனுபவிக்கிற வேதனைய அனுபவிக்க மாட்டாங்க ....

ஒரு பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்க்ப்பட்ட தலைவர்... எதவேனும்னாலும் செய்யலாமா ? அதே தலைவர் உங்க குடும்பத்த சீரளிச்சா பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்க்ப்பட்ட தலைவர் அப்படின்னு வாழ்த்துவிங்களா ?

பிரபாகரன், ராசிவ கொன்னா,,,, போய் பிரபாகரன மற்றும் அத பண்ணின எல்லாத்தையும் புடிங்க.. கொள்ளுங்க சட்டத்துமுன்னடி நிறுத்துங்க , அப்பாவி மக்கள் என்ன பண்ணினாக...?

எதோ நேர்மையா எழுதுறதா நினச்சி சோனியா பண்ணினது எல்லாம் சரி மாதரி எழுதிருக்கிங்க..???

அவங்க கோவம் ஞாயமானதா இருக்கலாம் அதுக்கு அப்பாவி மக்கள் பலியாகணுமா(பலிவாங்கனுமா) ?

-தமிழக தமிழன்

Esakimuthu said... @ June 5, 2009 at 5:45 AM

//எதோ நேர்மையா எழுதுறதா நினச்சி சோனியா பண்ணினது எல்லாம் சரி மாதரி எழுதிருக்கிங்க..???//

//இக்காலத்தில் கூட ஜனநாயக ரீதியாகக் குரல் கொடுப்போர் என்ன ஆகிறார்கள் என்பது யாவரும் அறிந்தது //
accept it .

தமிழ்க்கீரன் said... @ June 5, 2009 at 6:54 AM

//நான் படித்த மிக சிறந்த பதிவுகளில் ஒன்று. பொறுப்பான பதிவு. நன்றி. வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத்தமிழர்களில் பலர் புலிகளினால் நன்றாக Brainwash செய்யப்பட்டவர்கள். அவர்கள் கேட்பது புலிகளின் பிரசார வானெலி பார்ப்பது GTV, தீபம் இணையத்தில் புதினம், தமிழ்வின்,Tamilnet இப்படியாக அவர்கள் வேறு ஒரு கனவு உலகத்திலேயே வாழ்கிறார்கள். இலங்கையில் புலிகள் தங்களை எதிர்த்தவர்களை எல்லாம் படுகொலை செய்த மாதிரி இவர்களுக்கும் புலிகளை எதிர்ப்பவர்கள் தமிழ் துரோகிகள் ஆனார்கள் .ஆனால் தமிழ் நாட்டு பதிவர்களில் பெரும்பாலேர் இவர்களுக்கு நல்லதை, யதார்த்தை கூறாமல் மேலும் உசுப்பேற்றி கொண்டேயிருந்தார்கள் என்பது கவலைக்குரியது.//

பாராட்டுக்க்களை கூறும் போது கூட நாம் யார் என்று தெரியாமல் இருக்க வேண்டும் என்னும் அளவிற்கு நாம் பயந்துள்ளோம்...என்பதையே உங்கள் அனானிப் பெயர் சொல்கிறது...

தமிழ்க்கீரன் said... @ June 5, 2009 at 7:09 AM

//பனையூரான் said...
நூறு வீதம் எவரும் சரியாக இருந்து விடமுடியாது. புலிகளின் வீழ்ச்சிக்கு சர்வதேசம் அவர்களின் வளர்ச்சியைக்கண்டு பயந்ததே காரணம். ஆயுதப் போராட்டம் ஏன் உருவானது என்றும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.இக்காலத்தில் கூட ஜனநாயக ரீதியாகக் குரல் கொடுப்போர் என்ன ஆகிறார்கள் என்பது யாவரும் அறிந்தது.கொல்லப்பட்டவர்கள் ஊடகவியலாலர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அடுக்கிக்கொண்டு போகலாம். பதிவர்கள் மீதுள்ள கோபத்தால் போரட்டத்தை கொச்சைப் படுத்த வேன்ன்டாம்.//

போராட்டத்தை நான் ஒரு போதும் தவறாகக் கூறியதில்லை ஒரு கன்னத்தில் அறைந்தால் ம்று கன்னத்தையும் சேர்ந்து அறைய நினைப்பவன் தான் நானும்...ஆனால் சூழ்நிலை அப்படி இல்லை... முழு படையும் புத்துணர்ச்சியுடன் இருக்கும் போதே வெற்றி பெற இயலவில்லை...இப்போது மதிப்போர்தான் வெற்றி அளிக்கும்...இது வரை பொதுமக்கள் ஈழத்திற்கு போராடுவதை விட தங்கள் வாழ்வாதாரத்திற்கு தான் போராடினார்கள்...அவர்களும் மனம் உவந்து போராட வேண்டும் அதற்கு அகிம்சை வழியே சாலச் சிறந்தது

யாரோ - ? said... @ June 5, 2009 at 9:28 AM

நாங்கள் யாரும் தமிழ்ப் பதிவர்களை எதிர்க்கவில்லை. உங்களை இப்படிப்பதிவு போட துர்ண்டியவர்கள் இல்லை என்றும் சொல்லவில்லை. ஈழப் பதிவர்கள் என்பதை நீங்கி விடுங்கள் நாங்களும் ஈழம்தான். ஆனால் எங்களுக்கு இந்தியாதான் எதிரி தமிழர்கள் அல்ல. சிறிலங்காவாவது நேருக்கு நோ; அடிக்கின்றது. இந்தியா????? ஞாபகம்வைத்துக்கொள்ளுங்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக உலககோப்பை தொடக்கம் ஒலிம்பிக் வரை இந்தியாவை ஆதரித்து வந்த நாம் மட்டும் அல்ல இன்னும் எத்தனையோ பேர் இப்போது இந்தியாவை எதிரியாகத்தான் கருதுகிறோம். மறக்கவும் மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம்.

Anonymous said... @ June 5, 2009 at 9:58 AM

சாதாம் ஹுசைன் சுற்றம் அமெரிக்க ?

''இவையெல்லாம் தானே உங்கள் பின்னடைவிற்கு காரணம்''
இந்தியாவின் தமிழீழ விரோதகொல்கை ஆல்ல ?

வட, கிழக்குப்பிரச்சனையில் கருணாவை எதிரியாக்கியது

இருபத்தி ஏற்பாடு காலம் கழித்து யார் துணையுடன் ஊருவகிய சுழல் ? raw who is he

முஸ்லிம் சகோதரர்களை ''
தமிழ் ஈழத்தை ஏற்க மறுத்த நிலைப்பாடு ஆது ஒரு பண்பாடு சிக்கல்
what singalas given to muslims ?

அமிர்தலிங்கம், சிவசிதம்பரம்
தனி ஈழம் தான் எம் மக்கள் விருப்பம் என்பதில் வுறுதி ?

கிருஷ்ணா said... @ June 5, 2009 at 10:33 AM

பதிவர்களை, ஈழப்பதிவர்கள், இந்தியப் பதிவர்கள், புலம்பெயர் பதிவர்கள் என்று பிரித்துவைத்துப் பேசும்நிலை இருக்கும்வரை இந்த முரண்பாடுகள் தீரப்போவதில்லை. அதேவேளை, போரால் பாதிக்கப்பட்டு -நம்பியவர்களால் கைவிடப்பட்டு-நொந்துபோயிருப்பவர்களிடம் அறிவுரை கூறாதீர்கள். தயவுசெய்து இன்னும் சில மாதங்களுக்காவது..

sen said... @ June 5, 2009 at 11:12 AM

இந்த இடுகையை வாசித்ததும் ஒரு சலிப்பும் மனவருத்தமும் உண்டாகியது.
நான் ஒரு ஈழத்தமிழன்.
ஈழத்தில் நடப்பவற்றால் உணர்வு பூர்வமாக மிகவும் பாதிக்கப் பட்டு உள்ளவன்.
என் மாதிரி பலரும் பாதிக்கப் பட்டு ஒரு சமூகமே மன உளைச்சலில் உள்ளது.
ஒரு சில ஈழத்தமிழர்கள் இந்த நேரத்தில் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கி உள்ளது உண்மைதான்.இவர்கள் சிறிய சதவீதம்தான்.தமது இனத்தின் அவலத்தைக் கண்டு மகிழ்ச்சி கொள்ளும் இவர்களை நான் normal பிறவிகளாக கருதுவதில்லை.

ஈழத்தமிழர்கள் நாங்கள் ஒருவரும் உங்களை எதிரிகளாகப் பார்க்கவில்லை.ஏற்கனவே ஒரு லட்சம் மக்களையும் இருபத்தையாயிரம் போராளிகளையும் இழந்த நாங்கள் கடைசியாக நடந்த போரில் இன்னும் பல ஆயிரம் போராளிகளையும் ஐம்பதாயிரம் மக்களையும் அதுவும் கடைசி மூன்று நாட்களில் இருபந்தைதாயிரம் மக்களை இழந்து விட்டோம். எங்கள் மக்கள் மூன்று லட்சம் தடுப்பு முகாம்களில் சரியான உணவு பாதுகாப்பு இல்லாமல் வாடுகிறார்கள்.
எமது இளைய சமுதாயத்தினர் தமிழர் என்ற ஒரே காரணுத்துக்காக சித்திரவதை செய்யப் பட்டு படு கொலை செய்யப் படுகிறார்கள்.
எல்லா தமிழருமே அடிமை நிலையில்தான் நடத்தப் படுகிறார்கள்.
இந்த நிலையில் துக்கம் தாளாமல் சில ஈழத்தமிழர்கள் இங்கு வந்து புலம்பினால் அது உங்கள் போன்றோருக்கு போர் அடிக்கிறது போல உள்ளது.

நான் ஈழத்தமிழருக்கு இந்த வேண்டுகோளை விடுக்கிறேன்
இப்படியே எத்தனை நாட்களுக்கு விழுந்த படியே புலம்பிக் கொண்டு இருப்பது.
இது எமது இருண்ட காலம்தான்,ஆனால் தப்பி பிழைத்து உயிருடன் இருப்பவர்களை காப்பாற்ற நாங்கள் எழத்தான் வேண்டும்.
சும்மா இங்கே வந்து புலம்பாமல் அடுத்த காரியத்தை நாங்கள் பார்க்க வேண்டும்
தன் கையே தனக்கு உதவி.

இந்த இடுகையை பார்த்ததுமே புரிகிறது. இதை எழுதியவருக்கு எங்கள் வரலாறோ அல்லது மனத்தின் வலியோ புரிந்த மாதிரித் தெரியவில்லை.
இத்தனை லட்சம் மக்கள் கொல்லப் பட்டதோ ,குண்டு மழை பொழியப் பட்டு கொடுமைக்கு உள்ளானதோ குழந்தை முதல் கர்ப்பிணி பெண் வரை கொல்லப் பட்டதோ இவர் போன்றவர் மனத்தை கரைத்தாகத் தெரியவில்லை.
சோனியா செய்தது என்ன தவறு என்று கேட்கிறார்.
இங்கு வந்து புலம்பும் ஈழத்தமிழர்களே !
நீதி இரக்கம் என்பதெல்லாம் எதிர்பார்த்து உங்கள் நேரத்தை வீணடிக்காமல் அடுத்து செய்ய வேண்டிய வேலையை தொடங்குங்கள்.
அத்துடன் தேவையில்லாமல் இழிவான வார்த்தைகள் பயன்படுத்தி எங்கள் மரியாதையை நாங்களே கெடுக்கக் கூடாது.
சும்மா வாயை மெல்பவர்களுக்கு அவல் கொடுக்காதீர்கள்.
ஈழத்தமிழர்கள் இனிமேல் இழப்பதற்கு ஒன்றும் இல்லை
இந்த நேரத்தில் கூட உங்கள் நிலைமைக்கு நீங்கள் தான் காரணம் என்று சொல்லும் இரக்க சுபாவம் கொண்டவர்களை நம்பி ஏதோ தார்மீக ஆதரவு கிடைக்கும் என்று நம்பி புலம்புவதோ கோபம் கொள்வதோ பயன் அற்றது.

சவுக்கடி said... @ June 5, 2009 at 11:21 AM

அன்பரே,

காந்திய வழியில் தமிழகத்தில் கடந்த நான்கைந்து மாதங்களுக்கும் மேலாக ஊர்தோறும் ஓராயிரம் போராட்டங்கள் நடந்தன.

ஓர் அணுவளவும் அதிகாரத்தில் உள்ள எந்தக் கழுதையும் அதை மதிக்கவில்லை!

மாறாக, இராசபக்சேவைவிட அருவருப்பாக நடித்து ஏமாற்றினர்!

அவர்களுக்கு உறைக்கும்படியான வேறு ஏதோ மொழி/வழி இருக்கிறது.
அடுத்து, அதைத்தான் கண்டாக வேண்டும்!

Anonymous said... @ June 5, 2009 at 11:49 AM

கதைக்காக கூட கண்ணகி எல்லாரையும் கொல்ல சொல்லவில்லை. . தீயவர்களை தான் கொல்ல சொன்னாள். குழ்ந்தைகளை எல்லாம் கொல்ல சொல்லவில்லை.

Unknown said... @ June 5, 2009 at 12:27 PM

@sen

Dnt get confused by this post..Always Tamilians from TamilNadu are with EElam Tamils...untill our death.

Few brahmin tamils might be trying to create divide between us.

Iam asking sorry..if this post hurted you.

Long live eelam Tamils.

Vasanth, TamilNadu.

தமிழ்க்கீரன் said... @ June 5, 2009 at 12:59 PM

//Robin said...
கருத்துக்கள் அனைத்தும் உண்மை. ஆனால் புரிந்து கொள்ள கொஞ்சம் நிதானம் வேண்டும்.//

உண்மை தான் ரொபின்...

தமிழ்க்கீரன் said... @ June 5, 2009 at 1:03 PM

//கிருஷ்ணா said...
நொந்துபோயிருப்பவர்களிடம் அறிவுரை கூறாதீர்கள். தயவுசெய்து இன்னும் சில மாதங்களுக்காவது..//

இது அறிவுரை அல்ல... அது எனக்கு தேவையும் இல்லை...

தமிழ்க்கீரன் said... @ June 5, 2009 at 1:26 PM

//sen said...

//இந்த இடுகையை பார்த்ததுமே புரிகிறது. இதை எழுதியவருக்கு எங்கள் வரலாறோ அல்லது மனத்தின் வலியோ புரிந்த மாதிரித் தெரியவில்லை.//

ஆமாம் எங்களுக்கெல்லாம் வரலாறு தெரியாது தான்...நீங்கள் மட்டும் தான் அதை அறிவீர்கள்...யாரும் உங்களைப் புரிந்து கொள்ளவும் முடியாது...உங்களால் யாரையும் புரிந்து கொள்ளவும் இயலாது...

வரலாறு பற்றி பேசுபவர்கள்...

இலங்கை ராணுவத்தின் கோரத் தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்படுவதைப் போல், விடுதலைப் புலிகளால் இலங்கை முஸ்லீம்கள் பல மடங்கு பாதிக்கப்பட்டு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் முஸ்லீம்கள் பகுதிகளில் இரவு 12 மணிக்கு விடுதலைப் புலிகள் துப்பாக்கிகளுடன் புகுந்து, அங்குள்ள லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் அசையும், அசையா சொத்துக்கள் அனைத்தையும் பிடுங்கி, 24 மணி நேர அவகாசத்தில், வாழ்ந்த இடங்களை விட்டு, உடுத்திய உடைகளோடு வெளியேற்றிய வரலாறு பற்றி பேசுங்களேன் பார்ப்போம்

இலங்கை கிழக்கு மாகாணத்தில் உள்ள காத்தான்குடி பள்ளி வாசலில் இரவு தொழுகை நடந்திக்கொண்டிருந்த நிராயுதபாணியான முஸ்லீம்கள் நூற்றுக்கணக்கானவர்களை விடுதலைப் புலிகள் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற வரலாறு தங்களுக்கு ஞாபகம் இருக்கா...இலங்கைத் தமிழர்களுக்காகவே வாழ்நாள் எல்லாம் உழைத்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் உள்ளிட்டவர்கள் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட வரலாறு என்னாயிற்று
புலனருவ மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் நள்ளிரவில் புகுந்து முஸ்லீம் பச்சிளம் குழந்தைகளை கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்றதும் வரலாறு தானே...?

அந்த சம்பவம் அன்று உங்கள் மனதை கரைக்க வில்லையா...

அவர்களின் மனத்தின் வலியை தாங்கள் அறிவீரா...

Anonymous said... @ June 5, 2009 at 6:17 PM

இதைத் தான் பின் பக்கமா கையை விட்டு மணந்து பார்க்கிறது என்பது. கொஞ்ச நேரம் வீனாகிவிட்டது. தறுதலைகளுக்கு பதில் சொல்லி.

Anonymous said... @ June 5, 2009 at 8:38 PM

//பித்தன் said...
யார் மீதும் தகாத வார்த்தைகள் பயன் படுத்துறது தவறு... அகிம்சை வழில போராடனும்... போன்று எழுதிருப்பதை ஒத்துக்கொள்ள முடிகிறது....//

அது ஏனோ சில தறுதலைகளுக்கு புரிய மாட்டேன்கிறது

Anonymous said... @ June 5, 2009 at 9:35 PM

எல்லோருக்கும் இதைப்போல் சொல்ல வேண்டுமென்று ஆசை தான் ஆனால் பழிச்சொல்லுக்கு பயந்து ஒதுங்குகிறோம்...உங்கள் தைரியமான பதிவுக்கு நன்றி

Anonymous said... @ June 5, 2009 at 11:21 PM

good post, but most of the people not ready to understand

sen said... @ June 6, 2009 at 1:21 AM

இப்போதுதான் புரிகிறது.,
நீங்கள் சொன்ன பதிலில் இருந்தும் உங்கள் சீற்றத்தில் இருந்தும் நீங்கள் எந்தப் பின்னணியில் இருந்து வருகிறீர்கள் என்பது.
நான் தமிழ் மக்களுக்கு நடந்த நடக்கிற கொடுமை பற்றி பேசினால் நீங்கள் புலிப் புள்ளி விபரங்களோடு வருகிறீர்கள்.
நான் தமிழ் முஸ்லிம் என்று இங்கு பிரித்து பார்க்க விரும்பாவிட்டாலும் நீங்கள் அதை பற்றி பேச வைத்து விட்டீர்கள் ,கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு சிங்கள ராணுவத்தோடு சேர்ந்து முஸ்லிம் ஊர்காவற்படைகள் செய்த கொடுமை பற்றிக் குறிப்பிட மறந்து விட்டீர்கள் ,இந்த விஷயத்தில் தமிழர் முஸ்லிம் இருவருமே பாதிக்கப் பட்டார்கள் ,அதைத்தான் சிங்கள மேலாதிக்கமும் விரும்பியது.
நீங்கள் சொன்ன புள்ளி விபரங்களை விட இன்னும் மோசமான புள்ளி விபரங்கள் தமிழ் மக்களுக்கு நடந்த கொடுமைகள் பற்றி உள்ளன அதை எழுத இங்கே இடம் போதாது.
அது சரி புலிகள்தான் அழிந்து விட்டார்களே இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் உங்கள் போன்றவர்கள் புலிப் பாட்டு பாடிக்கொண்டு இருக்கப் போகிறீர்கள்
முன்னாள் புலியான கருணாதான் நீங்கள் கூறிய பல முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்களுக்கு காரணம் ,அவர்தான் உங்கள் நண்பர் ராஜபக்சேவின் அமைச்சராக ஜம்மென்று இருக்கிறாரே.
இறந்து போன புலிகள் பற்றிப் பேசாமல் ,இந்த முன்னாள் புலிக்கு தண்டனை வாங்கித் தருவதற்கு நீங்கள் மனித உரிமை அமைப்புக்கள் மூலம் முயற்சி செய்யலாமே?

நான் நீங்கள் யாரோ தமிழகத்தமிழர் ஏதோ தனது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறார் என்று நினைத்தேன் ,ஆனால் ஒரு திட்டத்தோடுதான் வந்திருக்கிறீர்கள் என்பது எனது மந்த மூளைக்கு இப்போதுதான் புரிகிறது.

இப்போது நீங்கள் என்னதான் சொல்கிறீர்கள் ?
ஈழத்தமிழர்களை ராஜபக்சே கொன்றது சரி,,
இந்தியா இலங்கைக்கு உதவி செய்தது சரி.
தமிழர்கள் சித்திரவதை செய்யப்படுவது சரி.
தமிழர்களை தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்திருப்பது சரி.
தமிழர்களின் காணிகளை அரசு அபகரித்து அங்கு சிங்களவர்களை குடி அமர்த்துவது சரி.
தமிழர்களுக்கு அரசியல் உரிமைகள் ,தீர்வு கொடுக்கப் பட்டாதது சரி
அப்படித்தான் நீங்கள் சொல்கிறீர்களா?
மொத்தத்தில் இப்போதைய சிங்கள அரசு செய்வதெல்லாம் சரி என்று சொல்கிறீர்களா?

mathan said... @ June 6, 2009 at 1:54 AM

இங்கு வந்து பின்னூட்டம் போடுபவர்களின் கருத்துகள் கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருக்கிறது
ஏதோ அறிவு பூர்வமாக கருத்து சொல்வதகாக் கூறிக்கொண்டு நானும் இதைதான் சொல்ல நினைத்தேன் நீங்கள் துணிச்சலாகச் சொல்லிவிட்டீர்கள் என்று பாராட்டுத் தெரிவிக்கிறார்களே ,அத்துடன் பழி சொல்வார்கள் என்று பேசாமல் இருந்தேன் என்றும் கூறுகிறார்கள்.
சரியான கருத்தை சொன்னால் ஏன் பழி சொல்லப் போகிறார்கள்.
அப்படியானால் தங்கள் எண்ணங்களையும் தங்கள் மனத்தின் இரக்கமற்ற வெளிப்பாடுகளையும் கண்டு தாங்களே வெட்கப் படுகிறார்கள் போலத் தெரிகிறது.

தமிழ்க்கீரன் என்ற அழகான பெயருக்குள் ஒளிந்திருப்பவர் தமிழகத்தமிழர் இல்லை --
ஒரு ஐந்து வீதம் அப்படி இருக்காக் கூடிய சாத்தியக்கூறு இருந்தாலும் ,
இவருடைய கருத்துகள் பெரும்பான்மையான தமிழக மக்களின் கருத்துக்கள் இல்லை.
தமிழர் மீது அக்கறை கொண்டவர் மாதிரி வந்து பின்பு அவர்களுக்கு எதிராகவே கருத்து கூறி பின்பு தன்னை அறியாமலே தான் யார் என்பதை காட்டிக்கொண்டு விட்டார்.

இதைத்தான் உளவியல் போர் என்று சொல்வார்கள்.
ஈழத்தமிழர்களே , தமிழகத் தமிழர்களே
ஜாக்கிரதையாக இருங்கள் ,
இலங்கை அரசு உளவியல் போருக்காக பல மில்லியன் டாலர்களை ஒதுக்கி உள்ளதாக செய்தி வருகிறது.
தமிழ் மக்களைக் குழப்பி அவர்களின் செயல் பாடுகளை முடக்குவதுதான் இந்த உளவியல் போரின் நோக்கம்.

ஒரு தமிழகத் தமிழன் said... @ June 6, 2009 at 2:01 AM

இந்த இடுகை வேண்டுமென்றே ,தமிழகத் தமிழர்களுக்கும் ,ஈழத்தமிழர்களுக்கும் இடையில் சிண்டு முடித்து விடும் நோக்கத்தோடு எழுதப் பட்டது.
இதை எழுதியவரின் பின்னணி பற்றி எனக்கு சந்தேகம் உள்ளது.

லக்கிலுக் said... @ June 6, 2009 at 2:02 AM

அனேகமாக இந்த இடுகையை எழுதியவர் ‘ரா’வை சார்ந்தவராக இருக்கலாம் :-))))))))

தமிழ்க்கீரன் said... @ June 6, 2009 at 2:05 AM

// sen said...
இப்போது நீங்கள் என்னதான் சொல்கிறீர்கள் ?
ஈழத்தமிழர்களை ராஜபக்சே கொன்றது சரி,,
இந்தியா இலங்கைக்கு உதவி செய்தது சரி.
தமிழர்கள் சித்திரவதை செய்யப்படுவது சரி.
தமிழர்களை தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்திருப்பது சரி.
தமிழர்களின் காணிகளை அரசு அபகரித்து அங்கு சிங்களவர்களை குடி அமர்த்துவது சரி.
தமிழர்களுக்கு அரசியல் உரிமைகள் ,தீர்வு கொடுக்கப் பட்டாதது சரி
அப்படித்தான் நீங்கள் சொல்கிறீர்களா?
மொத்தத்தில் இப்போதைய சிங்கள அரசு செய்வதெல்லாம் சரி என்று சொல்கிறீர்களா?//

கண்டிப்பாக இல்லை...அவர்கள் செய்தது மாபெரும் தவறு தான்.

நம் வாக்குவாதம் திசை மாறிப்போய் விடுமோ என்ற அச்சம் என்னை இப்போது தொடுகிறது...நீங்கள் நினைப்பது போல் நான் எந்த திட்டத்துடனும் இதை எழுத வில்லை...சில விவாதங்களின் போது சில கசப்பான உண்மையை எடுத்து வைக்க வேண்டியுள்ளது...அப்படி எடுத்து வைத்தது தான் அந்த சம்பவங்களும்...சில வலிகள் வடுக்களாகவே வரலாற்றில் படிந்து விடுகின்றன.எம் தமிழ் மக்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் எங்களுக்கு மனம் பதறும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை...ஆனால் தமிழர்கள் புலிகள் மட்டுமே என்பது போல் எழுதப்படும் போது, புலிகள் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுக்கள் தமிழர்கள் மீது சாட்டப்பட்டதாக திரிக்கப்படுகிறது...

நண்பரே...உங்கள் வேதனை எனக்கு நன்றாகப் புரிகிறது...இது போன்ற வாதங்கள் சில வேளை வெந்த புண்ணில் பாய்ந்த வேலாகிறது...

வேண்டாம்நண்பரே...இனியும் வாக்குவாதம் வேண்டாம்...அடுத்த கட்டத்தை பற்றி யோசிக்கலாம்...வெட்டிவாதங்கள் தவிர்த்து, அடுத்த திட்டங்கள் பற்றி பேசலாம்..தமிழன் என்ற முறையில் கரம் கொடுக்க காத்திருக்கேன்.

Anonymous said... @ June 6, 2009 at 2:17 AM

இங்கு எழுதியுள்ள பாதி பேர் கருத்துக்களில் இருந்தே தெரிகிறது, இவர்கள் எல்லாம் மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை, புலிகளுக்காக குரல் கொடுக்கின்றனர். எங்கள் நாட்டு பிரதமரை கொன்ற குற்றத்திற்கு அனுபவியுங்கள். கொலைக்கு உடந்தையாக இருந்த ஈழத்தமிழர்களும் குற்றவாளிகள் தான்!. ஏன் ராஜீவை கொன்னப்ப எந்த எகால ஈனத்தமிழனும் கண்டனம் தெரிவிக்கவில்லை.

பிருந்தன் said... @ June 6, 2009 at 2:31 AM

மன்னித்து விடுங்கள் நீங்கள் தமிழக தழர் என நினத்து கருத்து எழுதியமைக்காக. மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன்.

தமிழ்க்கீரன் said... @ June 6, 2009 at 3:10 AM

//இதைத்தான் உளவியல் போர் என்று சொல்வார்கள்.
ஈழத்தமிழர்களே , தமிழகத் தமிழர்களே
ஜாக்கிரதையாக இருங்கள் ,
இலங்கை அரசு உளவியல் போருக்காக பல மில்லியன் டாலர்களை ஒதுக்கி உள்ளதாக செய்தி வருகிறது.
தமிழ் மக்களைக் குழப்பி அவர்களின் செயல் பாடுகளை முடக்குவதுதான் இந்த உளவியல் போரின் நோக்கம்.//

இதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்ளப்போகிறீர்கள் என்று என்க்குத்தெரியவில்லை...இதை படித்து விட்டு நீங்கள் என்னை ராஜபக்சே கூட்டத்தை சேர்ந்தவன், என்னலாம்...கெட்ட வார்த்தையால் என்னை வையலாம்.

உங்களின் குற்றச்சாட்டிற்கு பதில் நான் ஆரம்பத்திலேயே எழுதிவிட்டேன்

Anonymous said... @ June 6, 2009 at 3:23 AM

உலகத்துக்கே வழிகாட்டியாக பிரபாகரனை நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும். இலங்கை தமிழர்கள் புலிகளை பாதுகாப்பதற்காகவே அரணாக இருந்து அழிவதற்காகவே பிறந்தவர்கள் என்பதை நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும் ,அல்லது உங்களுக்கு தமிழின துரோகி, RAW உளவாளி என்ற பல பட்டங்கள் காத்திருக்கின்றன.

தமிழ்க்கீரன் said... @ June 6, 2009 at 6:17 AM

//லக்கிலுக் said...
அனேகமாக இந்த இடுகையை எழுதியவர் ‘ரா’வை சார்ந்தவராக இருக்கலாம் :-))))))))//

லஸ்கரை தொய்பா, சிமி,ஜமாத் அல்,இன்னும் இன்னும் எத்தனையோ அமைப்புகள் உள்ளன...அதையெல்லாம் ஏன் விட்டு விட்டீர்

Anonymous said... @ June 6, 2009 at 8:00 AM

intresting topic...வரலாற்றில் இவ்வளவு நடந்துள்ளதா...பின்னூட்டத்தில் நல்ல தகவல்கள் கிடைத்தது

உங்கள் தோழி said... @ June 6, 2009 at 8:48 AM

//உங்கள் கோபத்தை எதிரிகளிடம் காட்டுங்கள்...நண்பர்களிடம் காட்டி நண்பர்களையும் எதிரியாக்கி விடாதீர்கள்//
சில கருத்துக்களை தவிர மீதம் எல்லாமே மிக சரியான கருத்து தான் தமிழ்க்கீரன் அண்ணா.. நாங்கள் உங்களை குற்றம் சொல்லவில்லை இந்தியா ல உள்ள சில அரசியல் தலைவர்களை தான் குற்றம் சொல்கிறோம்.குற்றம் சொல்ல கூட இல்லை தனது சக இனமான தமிழ் இனம் அழிந்து கொண்டிருப்பது கண்டும் கை கட்டி வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கும் அவர்களை கண்டு தான் நெஞ்சு கொதிக்கிறோம்.ஆடு மாடுகளை போல ஒரு வேலிக்குள் உண்ண உணவில்லாமல் போட ஒழுங்கான உடை இல்லாமல் தினமும் செத்திட்டு இருக்கிற நிலைமை இந்தியா நினைத்து இருந்தால் மாறி இருந்திருக்கும் இல்லையா? இது தான் எங்கள் கோபமே தவிர தமிழக தமிழர் ஈழ தமிழர் என்று நங்கள் பிரித்து பார்க்கவில்லை அண்ணா.

//உங்கள் சோகம் நாங்கள் அறிகிறோம்...
நாங்கள் ஜடமல்ல...//
உங்களை போல ஒரு சிலருக்கு மட்டும் புரிந்து பயன் இல்லை அண்ணா.புரிஞ்சுக்க வேண்டியவங்க புரிஞ்சும் புரியாமல் இருக்காங்களே அது தான் மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கு.
//கணவனைக்கொன்ற ஒரே காரணத்திற்காக மதுரையை எரித்த கண்ணகி கற்புக்கரசியானால்... இதுவும் ஒரு கற்புக்கரசியின் செயல் தான்//

கணவன் என்கிற ஒரு தனி மனிதனை கொன்ற ஒரே காரணத்துக்காக இந்தியா ல மதுரையை எரித்தவங்க கண்ணகி.ஆனா ஆயிரம் ஆயிரமா தமிழ் மக்கள் நிஜாயமே இல்லாமல் இறந்து போனாங்க கண்ணகி வாழ்ந்த அதே இந்தியா ல இருந்து கொண்டு தானே யாரும் நம்ம தமிழருக்கு உதவி பண்ணல இது என்ன அண்ணா நிஜாயம்?
நான் சொன்ன விஷயங்கள் சரியோ தப்போ தெரில, எனக்கு சரி என்று தோணினத எழுதினான் தப்பு என்றா தயவு செய்து மன்னிச்சிடுங்க தமிழ்க்கீரன் அண்ணா.

தமிழ்க்கீரன் said... @ June 6, 2009 at 9:52 AM

//உங்கள் தோழி said... நான் சொன்ன விஷயங்கள் சரியோ தப்போ தெரில, எனக்கு சரி என்று தோணினத எழுதினான் தப்பு என்றா தயவு செய்து மன்னிச்சிடுங்க தமிழ்க்கீரன் அண்ணா.
//

சகோதரிக்கு...இவ்வளவு நிதானமான உங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி...இப்படி ஒரு பதிவு எழுதியதற்காக தமிழ்த்துரோகி, ரா, கூலிப்படை என்ற ரீதியில் குற்றம் சாற்றப்பட்டு வரும் நிலையில் ஒரு சகோதரியின் புரிதல் பின்னூட்டம் சற்றே மனதிற்கு சற்று ஆறுதல் அளிக்கிறது.

Yohini said... @ June 6, 2009 at 11:11 AM

உங்கள் பதிவை வாசித்து விட்டு பல நிமிடங்கள் யோசித்தேன். சில சமயங்களில் அந்த நொடியில் வாழும் வரை புரியாது அதன் வலி. ஒரு வேலை நீங்கள் ஈழத்தில் பிறந்து உங்கள் சொந்தங்கள் கதறி அழ கொல்லப்பட்டும் வலி கண்டிருப்பின் புரியலாம்.

சொந்தத்தை பிரிந்து வாழ்ந்து பார்த்தால் தெரியும் அந்த வலி. கண்ணகி கதையை சொல்லி எம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்றீர்கள்.

இந்திய உதவிக்கு காரணம் தாம் வல்லரசாய் இருக்க வேண்டும் என்பதே. தயவு செய்து வலி புரியாவிட்டலும் பரவாயில்லை இப்படி எம் மக்கள் கொலை சரி என்று வாதிட வேண்டம். தலை வலி தனக்கு வந்தால் புரியும் என்பார்கள் ஆனால் எம்மக்கள் பட்ட துன்பத்தை வேறு யாரும் பட வேண்டாம்.

siva said... @ June 6, 2009 at 11:46 AM

sivasithamparam wasn't killed by anybody.
he died of a natural cause due to illness.you have given the wrong information.
as for your information about muslims,you have only just given the onesided view.
srilankan govt used the divide and rule policy to incite voilence between tamil speaking muslims and Tamils in eastern province.
They used Muslims to attack Tamils and This has caused animosity between these groups.
they deliberately used muslims to chase tamils from their lands and unleash violence against tamil population.even now lot of eastern tamils are not resettled in their lands
the anony person says it was right that eelam tamils were killed and they deserve their suffering ,
I ask this person,
before Rajiv Ghandi was killed there were 10000 eelam Tamils killed by Indian Army.
during this war the number killed may be 50,000
it seems he is still not satisfied,
does he want an other one million eelam tamils to be killed to get full satisfaction.

By the way ,if this is the attitude the people take, then why do people talk about 'Ahimsa'
I am flabbergasted by the attitude of some of these people.
They seem to be enjoying other people's suffering.

What cruel minds some people have?

தமிழ்க்கீரன் said... @ June 6, 2009 at 12:22 PM

//siva said...
sivasithamparam wasn't killed by anybody.
he died of a natural cause due to illness.you have given the wrong information.//
இன்று வரை ராஜீவ் காந்தியயும் தான் புலிகள் கொல்ல வில்லை என்று சிலர் கூறிவருகிறீர்கள்...?நீங்கள் சொல்வது மட்டும் தான் உங்களுக்கு வரலாறு...அடுத்தவர்கள் என்ன சொன்னாலும் உங்களுக்கு அவை எல்லாம் தவறு தான்...நீங்கள் அதிபுத்திசாலிகள்...மற்றவர்கள் அடி முட்டாள்கள்...போங்கய்யா

siva said... @ June 6, 2009 at 10:26 PM

I was only pointing out this was wrong information.
Srilanka government does lot of false propaganda they put lies in their websites and tries to present blatant lies as genuine information ,ratherthan parroting what the srilankan govt says it is better to actuaaly search for the truth.

as for leader sivasithamparam, it was well known he died of illness.

Here is the news item from 2002.

Senior Tamil leader Sivasithamparam dead
[TamilNet, Wednesday, 05 June 2002, 03:04 GMT]
Mr. Murugesu Sivasithambaram, President of the Tamil United Liberation Front (TULF), the main constituent of the Tamil National Alliance, passed away peacefully early Wednesday morning around two at the age of seventy-nine. The death occurred at the Colombo national hospital after a brief illness.

Mr.Sivasithamparam has been the sole national list parliamentarian of the Tamil National Alliance at the time of his death.

Born on 20 th July, 1923, Mr Sivasithamparam entered active politics as a member of the All Ceylon Tamil Congress (ACTC) in 1960. He was elected to the parliament from the Udupiddy electorate in the Jaffna district. In 1965 he was elected Deputy Speaker of the parliament. A founder member of the Tamil United Liberation Front Mr Sivasithamparam contested the Nallur electorate in 1977 general election as the TULF candidate and elected to parliament with the highest majority in the island.

He became the national list parliamentarian of the Tamil National Alliance following the general election held on December 05 last year.

உங்கள் தோழி said... @ June 7, 2009 at 7:51 AM

நன்றி அண்ணா, நாம் எல்லோரும் தமிழர்கள் ஒருவர் மனதை ஒருவர் புண்படுத்துவது நம் நோக்கம் அல்ல,ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலாக இருப்பது தானே.

sathish said... @ June 13, 2009 at 12:41 PM

what do you want to say? DMK Man...stop & we are not getting...
in tamilelam, there was no tasmac.
what about our tamil nadu?

Post a Comment