பெரும் புயலடித்து ஓய்ந்து இருக்கிறது...இந்திய தேர்தல்.எவ்வளவோகுழப்பத்திற்கு மத்தியில்மக்கள்தெளிவாகவே இருக்கிறார்கள் என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
பொதுவாக தமிழக மக்கள் எதையும் மொத்தமாகவே செய்வார்கள்.அலைகளில் சிக்கியே எல்லாத்தேர்தல்களும் சீரழிந்து போனது என்பதே தமிழகாரசியலின் முந்தைய வரலாறு...முதல் முறையாக மக்கள் தெளிவாக செயல்பட்டு எதிர்கால அரசியல் கோமாளிகளுக்கு மக்கள் எச்சரிக்கை மணியடித்திருக்கிறார்கள்...
அதில் இந்த பகுதியில் காங்கிரஸ், மற்றும் பாமக பெற்ற சாட்டையடிகளைப்பார்ப்போம்.
சாட்டையடி-1-காங்கிரஸ்
மத்தியில் காங்கிரஸ் ஒரு கணிசமான சீட்டுக்களைப் பெற்றாலும் தமிழகத்தில் காங்கிரசுக்கு சிறு சறுக்கல் தான்.ஈழப்பிரச்சனையில் இவர்களின் கண்டு கொள்ளா நிலையும், தலிவர்களின் வாய்ச்சவடலும் இதன் தலிவர்கள் தலை உருள காரணமாக அமைந்தது.இனிவரும் ஆட்சியில் இதனைச் சரிசெய்ய மக்கள் அளித்த சந்தர்ப்பம் தான் ஏனைய சீட்டுக்களும்..
சென்ற முறை லட்சங்களின் முன்னனியில் வெற்றி பெற்ற சிதம்பரத்திற்கு இந்த தேர்தல் முடிவில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது...மிகச்சொற்ப்ப எண்ணிக்கையில் இழுப்பறி, தொகுதிபக்கம் வராத MPக்களுக்கு அவன் எந்த கொம்பனானாலும் இது தான் நிலை என்று மக்கள் பெரும் சாட்டையடி மூலம் உணர்த்தியுள்ளனர்...
சாட்டையடி-2-பாமக
ஐந்து வருடங்கள் கோபாலபுரத்தில் வேட்டிதுவைப்பார், அடுத்த ஐந்து வருடங்கள் போயஸ் கார்டனில் சேலைதுவைப்பார் என்று புகழப்படும்...ராமதாஸின் சந்தர்ப்பவாத அரசியலுக்கு இந்த தேர்தலில் பலத்த சாட்டையடி...எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்தக்கட்சியில் அமைச்சர்களாக இருக்க வேண்டுமென்பதை அரசியல் கொள்கையாகக் கொண்ட பாமக பெற்ற சாட்டையடியை தமிழகமே கொண்டாடியது...ஆளுங்கட்சி எதிர்க்கட்சி பாகுபாடில்லாமல் அனைவரும் வரவேற்ற ஒரு நிகழ்வு இந்தப்படுதோழ்வி...
எங்கள் கட்சி MLA, MPக்கள் தவறு செய்தால் சாலை நடுவில் வைத்து சவுக்கால் அடிப்போம் என்று ஆரம்ப காலங்களில் இவர்கள் கூறி வந்ததற்கு இன்று இவர்கள் அனைவரையும் மக்கள் படுதோல்வி எனும் சவுக்கால் விளாசியிருக்கிறார்கள்...
தோல்வியிலிருந்து தான் உண்மையான பாடங்களைக்கற்றுக்கொள்ள இயலும்..அதை அறியாமல், தங்களின் சந்தர்ப்பவாத அரசியலுக்கான தோல்வியை , தேர்தல்கமிசன் மீதும், வாக்கு இயந்திரம் மீதும் கூறிக்கொள்வதை விட்டு விட்டு அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபடவிட்டால் பாமக என்ற கட்சியை இனி வரலாறுகளில் மட்டுமே தேட முடியும்...
7 comments
சரியான சாட்டையடி...
என்னது எலக்சன் ரிசல்ட் வந்துட்டாஆஆஆஆஆஆஆஆஆஆ????
தமிழ் / தமிழர் உணர்வு, நமது நாட்டில் மங்கி விட்டது என்பது தவறான எண்ணம். பேராயம் உணர வேண்டும்.
இயன்றால் எனது இடுகையைப் பாருங்கள்
http://kavise.blogspot.com/2009/05/16-2009.html
அன்புடன்
.கவி.
// Anonymous said...
சரியான சாட்டையடி...//
உங்கள் பெயரை குறிப்பிட்டு பின்னூட்டம் இடலாமே நண்பரே
// குசும்பன் said...
என்னது எலக்சன் ரிசல்ட் வந்துட்டாஆஆஆஆஆஆஆஆஆஆ????//
உமக்குத்தெரியாதா...
அய்யா , சிலசமயம் நல்ல கொள்கைகளுக்காக தோல்வியே தழுவ வேண்டியது தவிர்கமுடியாது , ஆனால் ப்ம்க் கொள்கைகள் வெற்றிபெறும் நாள் விரைவில் வரும் . என்றும் நிரந்தரம் அல்ல .
அய்யா , சிலசமயம் நல்ல கொள்கைகளுக்காக தோல்வியே தழுவ வேண்டியது தவிர்கமுடியாது , ஆனால் PMK கொள்கைகள் வெற்றிபெறும் நாள் விரைவில் வரும் . தோல்வி என்றும் நிரந்தரம் அல்ல .
Post a Comment